கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 156 பேர் என்றும் அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறினார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, அதிமுக MLAக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும், திமுக அரசைக் கண்டிக்கும் வகையிலும் அதிமுக MLA-க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தவாறு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.