மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, டெல்லியில் நாளை போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மீது பாஜக அரசு கோபத்தில் உள்ளதால்தான், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகம் முன்பு திமுக எம்.பிக்கள் நாளை போராட்டம் நடத்துவார்கள் எனக் கூறியுள்ளார்.