தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில், இதுவரை 57 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அண்ணாமலை, அது தொடர்பான ஆதாரங்களை ஆளுநரிடம் நேரில் சென்று அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கள்ள குறிச்சியில் நடைபெற்ற கள்ள மரணத்தை கண்டித்து CBI விசாரணை நடத்த வேண்டும் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் R N ரவியை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.