டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று இந்திய அணியை கொண்டாடினர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, டி20 உலகக்கோப்பை வென்ற பிறகு, முதல்முறையாக தனது சொந்த ஊரான வதோதராவுக்கு சென்றார். அங்கு, அலைகடலாக திரண்ட ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.