திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை போதையில் தள்ளாடுகிற மாடலாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். அரசின் கவனக்குறைவு, அரசே பொதுமக்களை கொலை செய்வதற்கு ஒப்பாக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், கஞ்சா போதையால் தமிழகம் தள்ளாடிவரும் நிலையில் தற்போது விஷ சாராயமும் இணைந்துள்ளது என தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மூலமாக விதவைகள் உருவாகும் மாடலாக திராவிட மாடல் அரசு உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.