திருப்பதியில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின் லட்டு விலை குறைந்துள்ளதாக வலைத்தளங்களில் பரவி வந்த தகவலுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டின் விலை ₹300ல் இருந்து ₹200 ஆகவும், லட்டு விலை ₹50ல் இருந்து ₹25 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், தரிசன டிக்கெட் மற்றும் லட்டு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.