இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் சுமார் ₹10.7 லட்சம் கோடி அளவுக்கான பொருளாதாரம் உள்ளடக்கியுள்ளதாக ‘ஜெஃப்ரீஸ்’ என்ற மூலதன சந்தை நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உணவு மற்றும் மளிகைப் பொருள் சந்தை வணிகத்தின் ₹56.5 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், 2ஆவது பெரிய நுகர்வுச் சந்தையாகும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன.