திருமணம் செய்து கொண்டு தனது சுதந்திரத்தை இழக்க விரும்பவில்லை என நடிகை சதா கூறியுள்ளார். ஜெயம், அந்நியன் போன்ற பல படங்களில் நடித்துள்ள சதா 40 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து மனம் திறந்துள்ள அவர், தற்போது சுதந்திரமாக வாழ்கிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் மனதுக்கு பிடித்த நபர் இதுவரை கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தால் அவரை திருமணம் செய்து கொள்வேன் எனவும் சதா தெரிவித்துள்ளார்.