திருமண வரன்களை தடுக்கும் நபர்களை கண்டித்து நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள நூதன போஸ்டர் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில், நீ எத்தனை வருஷம் நல்லா வாழ்ந்துருவ?’. ‘ஆறுதலுக்கு நல்லது நடக்கிறதை தடுக்க நினைக்கிற நீ நல்லா இருப்பியா?’ என வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் வரன்களை தடுத்தால் அடுத்து வைக்கப்படும் போஸ்டரில் தடுப்பவரின் புகைப்படம் இடம்பெறும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.