ஜூலை 23 – ஆகஸ்ட் 14 வரை இருமார்க்கங்களிலும் 55 மின்சார ரயில்கள் ரத்து என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற்றது. சனி (ஜூலை 27 ) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28 ) புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக அறிவிக்கப்பட்டபடியே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது.