இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 28ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கிய சில நிமிடங்களில் வெற்றி தீர்ந்தது. தொடர்ந்து இன்று அக்டோபர் 29ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. சென்னையில் இருந்து தேன் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட விரைவு ரயில்களில் அதிக அளவில் முன்பதிவு நடக்கிறது.