கலை & அறிவியல் கல்லூரிகளில், அக்டோபர் 31 முதல் நவம்பர் 25க்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் அறிவித்திருந்தார். ஆனால், அக். 31ஆம் தேதி தீபாவளி வருகிறது. பொதுவிடுமுறை நாளான அன்று எப்படி தேர்வு நடைபெறும் என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். செமஸ்டர் தேர்வு தொடங்கும் தேதி தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.