சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.