தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இன்று நாடு முழுவதும் பரவியது. வழக்கமாக ஜூலை 8 ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 6 நாட்களுக்கு முன்பே தொடங்கி உள்ளது எனவும் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.