ஈரோடு மாவட்டத்தின் கோபி அருகே அமைந்துள்ளது சிறுவலூர் ஆயிபாளைம். இங்கு உள்ள தேங்காய் நார் மில்லில் இன்று திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் தேங்காய் நார் தயாரிக்கும் இயந்திரங்கள் உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட பல பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. தொடர்ந்து கோபி மற்றும் பெருந்துறை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.