டி20 உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ரோஹித் ஷர்மா, பார்படாஸ் மைதானத்தில் இந்திய தேசியக் கொடியை நட்டு வைப்பது போன்ற படத்தை தனது எக்ஸில் பதிவிட்டது சர்ச்சையாக மாறியிருக்கிறது. தேசியச் சின்னங்கள் அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2-ன் படி, தேசியக்கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக்கூடாது. இதனால், ரோஹித் ஷர்மா மூவர்ணக் கொடியை அவமதித்து விட்டதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.