தேச மக்கள் வாக்களித்து 3ஆவது முறையாக தங்களை தேர்வு செய்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்.பிக்களின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் உரையாற்றி வரும் அவர், ஏழைகளின் நலனுக்காக செயல்பட்டதற்காக மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாகத் தெரிவதாகவும் சாடினார்.