‘மெட்ரோ’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிரிஷ், ஹஸ்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2016இல் வெளியான ‘மெட்ரோ’ படம், சென்னையில் நகை பறிப்பில் ஈடுபடுபவர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் சிரிஷின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சென்னையில் நேற்று அவருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் உட்பட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.