கன்னட நடிகர் தர்ஷன் மிகவும் மோசமானவர் என்றும், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார். ரசிகர் ரேணுகா சாமியை சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய ரம்யா, தர்ஷன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர், ரவுடிகளை ரசிகர்களாக வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.