சென்னை ராயபுரத்தில் நள்ளிரவில் அதிமுக தேநீர் பந்தலை அரசு அகற்றிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். ராயப்பேட்டையில் அமைக்கப்பட்ட தேநீர் பந்தல் சிறிய புல்டோசர் மூலம் அகற்றப்பட்ட வீடியோவை எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர், இராயபுரத்தில் மழைக்கால தேநீர் பந்தலை இரவோடு இரவாக அகற்றிய அராஜக அரசு! மழைகாலத்தில் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இஞ்சி டீ,சுக்கு காபி,பலகாரங்கள் என மக்களுக்கு தினந்தோறும் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது.
தேநீர் பந்தலால் மக்கள் பயனடைவதை கண்டு பயம் கண்ட திமுக அரசு, இரவோடு இரவாக தேநீர் பந்தலை அகற்றியுள்ளது. இது ஒன்றை அகற்றி விட்டதால் அவ்வளவு தான் என்று எண்ணி விட வேண்டாம். இனி இராயபுரத்தில் அடுத்தடுத்து தேநீர் பந்தல்கள் திறக்கப்படும் என திமுக அரசிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்!” எனக் கூறியுள்ளார்.