நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட IPC, CrPC, IEC ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதிநியம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.