நாடாளுமன்ற வளாகத்தில் என்டிஏ எம்.பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள், இதனை உணர்ந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற மரபுகள், விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதன்பின், பிரதமரின் வழிகாட்டுதல்படி செயல்படுவதாக, எம்.பிக்கள் உறுதியளித்தனர்.