மக்களவையில் நேற்று ராகுல் காந்தி பேசிய பேச்சில் சில குறிப்புகள், அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் உலகில், உண்மையை அழிக்க முடியும் என்றும், ஆனால் உண்மையில் உண்மையை அகற்ற முடியாது என்றும் தெரிவித்தார். அவையில் தாம் சொல்ல வேண்டியதைச் சொன்னதாகவும், அதுதான் உண்மை, அதில் எதை வேண்டுமானாலும் நீக்கட்டும் என்றும் கூறினார்.