இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவதை பார்த்ததில் இருந்து நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். ஹூக் ஷாட் அவரிடம் எனக்கு பிடித்தமான ஷாட்டாகும். சைப்பிரசுக்கு எதிரான ஆட்டத்தின்போது எங்களது இன்னிங்ஸ் மற்றும் விரட்டிபிடிக்க வேண்டிய இலக்கு பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருந்தேன்.
ஏதுவான பந்துகளை விரட்டியடித்தேன். பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. அதை சரியாக பயன்படுத்தி எனது ஷாட்களை விளையாடினேன் என சஹில் சவுகான் கூறியுள்ளார்.