சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன் 2.. ஜூலை 12 இல் வெளியாகும் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் எஸ்.ஜே சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தியன் – 2 திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. ஊழலுக்கு எதிராக கத்தியை தூக்கும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக வெளியான இந்தியன் திரைப்படம் இன்று வரை ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. மீண்டும் இணைந்திருக்கும் அதே கூட்டணி வெற்றியை பறிக்குமா? என்பதை பார்ப்போம்.