ஜூலை 17இல் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தோல்விக்கான காரணம் குறித்து தொகுதி வாரியாக இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். 17ஆம் தேதி தென்காசி, தேனி, திண்டுக்கல் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருந்தார். அன்றைய தினம், தென்காசியில் சசிகலா சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.