‘நீங்கள் நலமா’ திட்ட பயனாளிகளிடம் வீடியோ கால் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகளிடம் பேசிய அவர், அவர்களுக்கான உதவித்தொகை சரியாக வருகிறதா என்பதையும் கேட்டறிந்தார். இத்திட்டத்திற்கான பிரத்யேக neengalnalamaa.tn.gov.in இணையதளம் மூலமும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.