ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்ட தேர்வு மையங்களில் நீட் எழுதிய 4,200க்கும் மேற்பட்டோர் 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது சிரமமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரே மாவட்டத்தில் பலர் அதிக மதிப்பெண்களை எடுத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.