மக்களவையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். நீட் விவகாரத்தை நாடாளுமன்றம் முக்கியமானதாக கருதுகிறது, விவாதிக்க விரும்புகிறது என்பதை மாணவர்களுக்குச் சொல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டார். எனவே, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இது பற்றி விவாதிக்க விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தினார்.