நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பீகார் எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 மருத்துவர்களை சிபிஐ கைது செய்தது. இந்த 3 பேர் மீதும் தாள் கசிவு, நுழைவுத் தேர்வு முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் அறைகளுக்கு சீல் வைத்த சிபிஐ, லேப்டாப் மற்றும் மொபைலை பறிமுதல் செய்துள்ளது. இவர்கள் மூவரும் கடந்த 2021ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த மருத்துவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.