தமிழகத்தில் நீட் தேர்வுக்கு திமுக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் நீட் தேர்வினால் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதேபோல், நீட் தேர்வு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.