நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். நீட் அமலான பிறகு மருத்துவப் படிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டதாக கூறிய அவர், அதனால் தான் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருவதாக தெரிவித்தார். நீட் தேர்வில் உண்மையான விளைவுகளை உணர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக அவர் கூறினார்