மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்க நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். வினாத்தாள் கசிவு, சட்டவிரோதமாக கருணை மதிப்பெண், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நீட் தேர்வில் நடந்துள்ளதாக விமர்சித்துள்ள அவர், அரசு நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றார். நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.