நீட் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரஞ்சனை போலீசார் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். கடந்த மே 5இல் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது கண்டறியப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 10 பேரை கைது செய்திருந்த நிலையில், தற்போது முக்கிய குற்றவாளியும் கைதாகியுள்ளார்.