நடிகை சமந்தா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நெபுலைசர் பயன்படுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு, வைரஸ் பாதிப்புக்கு மாற்று வழியாக ஹைட்ரஜன் பெராக்ஸைட் பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, DRDO வில் 25 ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவர் எனக்கு அளித்த விலை குறைவான சிகிச்சையை நல்ல நோக்கத்துடன் பரிந்துரைத்தேன் என்று சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.