மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்று மேலும் சரிவடைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 குறைந்து, ஒரு சவரன் ₹51,920க்கும், கிராமுக்கு ₹60 குறைந்து ஒரு கிராம் ₹6,490க்கு விற்பனையாகிறது. பட்ஜெட் உரையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், தங்கம் சவரனுக்கு ₹2,080ம், கிராமுக்கு ₹260ம் குறைந்தது.