நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று காலை 11 மணிக்கு, நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் கமிட்டி அறையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடைய உள்ளது.