மகாராஷ்டிர அரசு சார்பாக வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். குறைந்தபட்சம் 12வது தேர்ச்சி மற்றும் முதுகலை முடித்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மாதம் ரூ.6 ஆயிரமும், ஐடிஐ/டிப்ளமோ தேர்ச்சி ரூ.8 ஆயிரமும், பட்டம்/முதுநிலை தேர்ச்சி மாதம் ரூ.10 ஆயிரமும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.