தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக். இதனால், அவர் பிரதமர் பதவியையும் இழந்திருக்கிறார். மக்களின் தீர்ப்பை மதிப்பதாகவும் “I am sorry என்றும் அவர் X தளத்தில் பதிவிட்டிருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி 412 தொகுதிகளையும் கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.