உத்தராகண்ட் : பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி மற்றும் காயமடைந்தோருக்கு தலா ரூபாய் 50,000 நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் ரிஷிகேஷில் பத்ரிநாத் சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ருத்ர பிரயாக் பகுதியில் சென்ற போது டெம்போ ட்ராவலர் வேன் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த 17 பேரில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.