ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் கூறிய குற்றச்சாட்டுக்கு ரோஹித் ஷர்மா பதிலடி கொடுத்துள்ளார். வறண்ட & வெப்பமான ஆடுகளத்தில், பந்தின் இயல்பான வடிவம் தானாகவே மாறுமெனக் கூறிய அவர், அனைத்து அணிகளும் அதனை உணர்ந்துள்ளன என்றார். ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் முன் கொஞ்சம் மூளையைப் பயன்படுத்துவது நல்ல விமர்சகர்களுக்கு அழகு எனவும் காட்டமாக கூறினார்.