திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி சாலை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த பூட்டோ (22), கிஷோர் (19), சஞ்சய் (19) மற்றும் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆயுதங்களுடன் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.