மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய, தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில், 6 மாதம் இலவச உணவு, தங்குமிடம் வழங்கி, மத்திய அரசுப் பணித் தேர்வுக்கு தமிழக அரசு பயிற்சி வழங்குகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 14இல் நடைபெற உள்ள நிலையில், பயிற்சி நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது