அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், “சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அரசு ஊ ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்த தகவலை அமைச்சர் கூறியுள்ளார்.