பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் 6 நாட்களுக்கு தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.