தமிழ்நாடு பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை சௌந்தர்ராஜன் புகார் அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் உட்கட்சி பூசல் தொடர்பாக புகார் அளித்த தமிழிசை, சமூக வலைத்தளங்களில் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துக்கள் பதிவிடுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.