நடப்பாண்டு நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் தற்போது நிரூபணமாகி உள்ளது. இந்நிலையில், “பாஜக மாணவர்களுடைய எதிர்காலத்தோடு விளையாடுகிறது” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில், “ஒவ்வொரு நாளும் மாணவர்களின் எதிர்காலத்துடன் பாஜக விளையாடுகிறது. ஒவ்வொரு நாளும் வினாத்தாள் கசிவதும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதும் தொடர் கதையாகி விட்டது” என்று குற்றம் சாட்டிள்ளார்.