மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த விஜயதாரணி தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், கட்சிப் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்த்து இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த இரண்டும் கிடைக்காததால் அவர் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜயதாரணி, அவை வடிகட்டின பொய் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.