சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் ஆளுநர் தமிழிசை இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார் அண்ணாமலை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழிசையின் இல்லத்திற்கு சென்று அண்ணாமலை நலம் விசாரித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை அண்ணாமலை விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழிசை – அண்ணாமலை இடையே கருத்து வேறுபாடு என தகவல்கள் பரவிய நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.