பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நீடிக்க வேண்டுமா? என்பதை பாக்., கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். பாபர் அசாம் கேப்டனாக அணியை வழிநடத்த அனைத்து வாய்ப்புக்களையும் வழங்கியும் அதில் அவர் முன்னேற்றம் காணவில்லை என்று விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் டி20 உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.